Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தவர் கைது

நாகப்பட்டினம், அக். 10: நாகப்பட்டினத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை செய்தவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் இடையே போதை மாத்திரை விற்பனை நடைபெறுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ஹலிலுல்ரகுமான் தலைமையிலான போலீசார் பழைய நாகூர் சாலையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் கடந்த சில தினங்களாக ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

அப்போது கல்லூரி நுழைவு வாயில் அருகே சந்தேகத்தின் பேரில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் மயிலாடுதுறை மாவட்டம் கூரைநாடு பூக்கடைதெருவை சேர்ந்த ரஞ்சித்(30) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் தஞ்சாவூரில் இருந்து போதை மாத்திரை வாங்கி வந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விநியோகம் செய்வது தெரியவந்தது. இது குறித்து நாகூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரஞ்சித் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 3 அட்டையில் இருந்த 26 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.