மயிலாடுதுறை, அக். 10: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா ஆக்கூர் உமையாள்புரம் தோப்புத் தெருவைச் சேர்ந்தவர் பரமானந்தம்(23). இவர், மினி பஸ்சில் சென்று வந்த 8ம் வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் தொடர்ந்து பாலியல் சில்மிஷம் செய்து வந்துள்ளார். இது குறித்து அந்த சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகந்தி மற்றும் மகளிர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த மகளிர் போலீசார் பரமானந்தத்தை கைது செய்து மயிலாடுதுறை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


