வேதாரண்யம்,செப்.10: கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் தண்ணீருக்காக வனப்பகுயைவிட்டு மான்கள் வெளியேறுகிறது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது. இந்த சரணாலயத்தில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள், நரி, குரங்கு, காட்டுப்பன்றி, குதிரைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளது. இந்நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் வனப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சாலை ஓரங்களில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொட்டிகள் தண்ணீர் ஊற்றப்படாமல் வெறும் தொட்டியாகவே காட்சியளிக்கிறது.
இதனால் வனவிலங்குகள் தண்ணீர் இன்றி தவித்து வருகிறது. தண்ணீரைத் தேடி காட்டு பகுதியில் உள்ள மான்கள் சாலையை கடந்து வரிசையாக 50க்கும் மேற்பட்ட மான்கள் செல்லும் காட்சி வாகன ஓட்டி ஒருவரின் மொபைல் மூலம் வீடியோ எடுக்கப்பட்டு வைரலாகி வருகிறது தண்ணீரைத் தேடி மான்கள் காட்டை விட்டு வெளியேறுகிறதா என்ற அச்சம் எழுந்துள்ளது. உடனடியாக கோடியக்கரை வனத்துறை அதிகாரிகள் அனைத்து தொட்டுகளிலும் போதுமான அளவு தண்ணீரை நிரப்பி வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் எனவனவிலங்கு ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


