Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியக்குழு கூட்டம்

கொள்ளிடம்,செப்.10: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம், மாதர் சங்கம் ஆகிய அமைப்புகளின் கூட்டு கூட்டம் நடைபெற்றது. விவசாய சங்க மாவட்ட செயலாளர் கே.எஸ்.சிவராமன், விவசாய சங்க ஒன்றிய தலைவர் கலியமூர்த்தி ஆகியோர் தலைமை வகித்தனர்.

விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கலியபெருமாள், மாதர் சங்க ஒன்றிய தலைவர் ஜீவமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய சங்க மாவட்ட செயலாளர் சிவராமன், ஒன்றிய செயலாளர் கஜேந்திரன், விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் தனசேகரன், மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சத்யா மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலாளர் சீனிவாசன் கலந்து கொண்டனர்.