கொள்ளிடம், அக். 9: கொள்ளிடம் பகுதியில் சாலைகளை அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புத்தூர், எருக்கூர் ஆகிய இடங்களில் புறவழிச்சாலை மற்றும் மாங்கனாம்பட்டு பகுதியில் நெடுஞ்சாலை உள்ளிட்ட பகுதிகளில் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
விபத்து நடந்த சாலைப் பகுதிகளை பார்வையிட்டு மீண்டும் விபத்து நடக்காமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் வகையில் அதிகாரிகள் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.இதில் டிஎஸ்பி ஆவுடையப்பன், உதவி கோட்ட பொறியாளர் சூரியமூர்த்தி, போக்குவரத்து ஆய்வாளர் மணியரசன், கொள்ளிடம் சப்-இன்ஸ்பெக்டர் வாஞ்சிநாதன், சாலை ஆய்வாளர் பிரபு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டனர்.


