Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

வேதாரண்யத்தில் 120 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு

வேதாரண்யம், அக். 9: வேதாரண்யத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் 120 கர்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. வேதாரண்யத்தில் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் வேதாரண்யம் ஒன்றியத்துக்குட்பட்ட 120 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. முன்னதாக கர்ப்பிணி பெண்களுக்கு மலர் மாலையிட்டு, சந்தனம் பூசி, கண்ணாடி வளையல் அணிவித்து, புடவை மற்றும் மங்கலப் பொருட்கள் வழங்கப்பட்டது.

விழாவில் வேதாரண்யம் ஒன்றிய குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சித்ரா, தமிழக வெற்றிகழக நகர செயலாளர் தர்மராஜன் ஒன்றிய செயலாளர் பாலமுருகன், பொறுப்பாளர்கள் நிர்வாகி வைத்தியா, வேதாரண்யம் நகராட்சி துணைத் தலைவர் மங்களாயகி, நகர மன்ற உறுப்பினர் ராஜீ, வர்த்த சங்க முன்னாள் மாவட்ட தலைவர் குணசேகரன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கர்ப்பிணிகளை ஆசிர்வதித்தனர்.