Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சீர்காழி அரசுபள்ளி தலைமை ஆசிரியருக்கு ராதாகிருஷ்ணன் விருது அமைச்சர் வழங்கினார்

சீர்காழி, செப் 9: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தியநாதபுரம் அரசு உயர் நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இரவி பணிபுரிந்து வருகிறார். இவரது சேவையை பாராட்டி பள்ளி கல்விதுறை, தமிழ் வளர்ச்சி செய்தி மற்றும் விளம்பரம் துறை அமைச்சர் ராஜ்மோகன் டாக்்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கி பாராட்டினார். விழாவில் இயக்குனர் பள்ளிக்கல்வி (கூடுதல்பொறுப்பு) லதா அரசு கூடுதல் தலைமைச் செயலர் சந்திரமோகன் தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் லயோலா மணி உடன் இருந்தனர்.

29 ஆண்டுகள் கல்விப் பணியாற்றி ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தலைமை ஆசிரியர் ரவியை, ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், முதன்மை மாவட்ட கல்வி அதிகாரிகள், அலுவலக நண்பர்கள், என் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் அலுவலக பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.