Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் எரிவாயு தகன கட்டணம் திடீர் உயர்வு

மயிலாடுதுறை, செப். 9: மயிலாடுதுறையில் எரிவாயு தகனக் கட்டணம் உயர்வு திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் எரிவாயு தகனம் செய்யும் இடத்தில் வசூலிக்கப்படும் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.இதுவரை எரிவாயு தகனம் செய்வதற்காக சுமார் ரூ.3,500 வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது டெண்டர் முறை மாற்றப்பட்டுள்ளதாகக் கூறி நிர்வாகத்தின் சார்பில் ரூ.5,000 முதல் ரூ.6,000 வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

ஏற்கனவே தங்களது குடும்ப உறுப்பினரை இழந்து துயரத்தில் இருக்கும் குடும்பங்களுக்கு இந்த கூடுதல் கட்டண உயர்வு பெரும் சுமையாக இருப்பதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிர்வாகமும், நகராட்சி நிர்வாகமும் உடனடியாக தலையிட்டு, எரிவாயு தகனத்திற்கான நியாயமான மற்றும் பொதுமக்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயம் செய்து அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.