Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

தமிழக அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 50 மாற்றுதிறனாளிகள் கைது

நாகப்பட்டினம், செப். 9: தமிழக பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகளில் உதவித்தொகையை உயர்த்தி வழங்காத தமிழக அரசை கண்டித்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்திய 50 மாற்றுதிறனாளிகளை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நடந்த முற்றுகை போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் மேரி வரவேற்றார்.

மற்ற மாநிலங்களைப் போல் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். உதவித்தொகை கேட்டு காத்திருப்போர் அனைவருக்கும் உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும். தமிழக பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகளில் மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை தமிழக அரசு உயர்த்தி வழங்கவில்லை இதை கண்டித்து நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் 16 பெண்கள் உட்பட 50 பேரை கைது செய்தனர்.