கொள்ளிடம்,அக்.8: கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் பழமையான மகளிர் சுய உதவிக் குழு கட்டிடம் இடித்து அகற்றும் பணி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே குன்னம் கிராமத்தில் மகளிர் சுய உதவி குழு கட்டிடம் இருந்து வந்தது. 20 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருந்து வரும் இந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் இருந்து வந்தது.
இதனை அகற்ற வேண்டும் என்று அப்பகுதி கிராம மக்கள் சார்பில் கோரிக்க விடுக்கப்பட்டது. கோரிக்கையை ஏற்று கட்டிட பொறியாளர்கள் இக்கட்டிடத்தை இடித்து அகற்ற சான்று அளித்ததன் பேரில், நேற்று கட்டிடம் இடிக்கும் பணி துவங்கி நடைபெற்றது. இந்த கட்டிடத்திற்கு பதிலாக புதிய கட்டிடம் கட்ட ஊராட்சி சார்பில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.


