கொள்ளிடம்,அக்.8: கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நிறைவு விழா நடந்தது. கொள்ளிடம் அருகே ஆயங்குடி பள்ளம் வேங்கடேசா மேல்நிலைப் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் நிறைவு விழா ஆயங்குடி பள்ளம் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் நாராயணன் தலைமை வகித்தார்.
திட்ட அலுவலர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். பள்ளி உதவி தலைமை ஆசிரியர் இராமச்சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஹரிதாசன், முதுகலை ஆசிரியர்கள் கோதண்டராமன், இராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர்கள் நடராஜன், வேலுமணி, ஓய்வு பெற்ற முதுகலை ஆசிரியர் உலகநாதன் மற்றும் ஆசிரியர்கள் அலுவலர்கள் மாணவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி திட்ட அலுவலர் கோவிந்தராஜன் நன்றி கூறினார்.


