Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

சீர்காழியில் வெள்ளையனே வெளியேறு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி

சீர்காழி, ஆக 8: சீர்காழியில் வெள்ளையனே வெளியேறு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ, மாணவிகள் சுதந்திரப் போராட்ட தலைவர்கள் வேடமணிந்து கலந்து கொண்டனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே சுபம் வித்யா மந்திர் பள்ளி சார்பில் வெள்ளையனே வெளியேறு இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் சுதந்திர போராட்ட தலைவர்களை போல் வேடமணிந்து சுதந்திரத்திற்காக பாடுபட்ட தலைவர்களை நினைவு கூர்ந்து பேசினர்.

சீர்காழி இன்ஸ்பெக்டர் கமல்ராஜ், மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வி, போக்குவரத்து காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் மணியரசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தலைவர்களை நினைவு கூர்ந்து உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் சுதீஷ் ஆலோசனையின்பேரில் பள்ளி துணை முதல்வர் கமலகுமார் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். விழா முடிவில் வரலாற்று துறை தலைவர் அலெக்சாண்டர் நன்றி கூறினார்.