வேதாரண்யம். ஆக. 7: வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புடன் வியாபாரிகள் சங்க இணைப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் வேதநாயகம் தலைமை வகித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கொடியினை மாநில துணைத்தலைவர் தென்னரசு ஏற்றி வைத்தார். பின்னர் அவர் சங்கத்தில் இணைந்தவர்களுக்கு சால்வை அணிவித்து வரவேற்று சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர் முருகானந்தம் வரவேற்றார்.
கூட்டத்தில் வர்த்தக சங்க நிர்வாகிகள் தலைவர் விக்னேஷ், நிர்வாக குழு தலைவர் வீரமணி, வியாபாரிகள் சங்க கெளரவத் தலைவர் ஆறுமுகம் வணிகர் சங்க பேரமைப்பு நிர்வாகி மாவட்ட செய்தி தொடர்பாளர் ரஜினிகாந்த், தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கதிரவன், மாவட்ட இணை ஒருங்கிணைப்பாளர் மா.ப.சாமி, வர்த்தக சங்க முன்னாள் தலைவர்கள் பகுருதீன் உள்ளிட்ட வர்த்தக சங்க பேரமைப்பு மற்றும் தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னாள் தலைவர் சந்திரமோகன் நன்றி கூறினார்.



