சீர்காழி, மே 6: மே 5ம் தேதியை முன்னிட்டு சீர்காழியில் வர்த்தக சங்கம் சார்பில் கடைகள் அடைக்கப்பட்டதால் கடைவீதி வெறிச்சோடி காணப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் சுமார் 3,000-க்கு மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளன. ஒவ்வொரு ஆண்டும் நகர வர்த்தக சங்கம் சார்பில் மே ஐந்தாம் தேதி கடைகள் அடைப்பு நடைபெறுவது வழக்கம்.
இதேபோல் இந்த ஆண்டு மே 5ம் தேதியை முன்னிட்டு நேற்று சீர்காழி நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் மக்கள் கூடும் இடங்களில் கூட்டம் இல்லாமல் காணப்பட்டது. மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. நகர்ப்புற பேருந்துகளில் கூட்டம் குறைவாக காணப்பட்டது. பூக்கடைகள், பழக்கடைகள், மருந்தகங்கள் சாலையோர கடைகள் செயல்பட்டன.



