வேதாரண்யம், மே 6: வேதாரண்யம் வட்டார கல்வி அலுவலராக பணியாற்றியவர் ராமலிங்கம். இவர் கல்வித் துறையில் கடந்த 40 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்றார். ஓய்வு பெற்ற வட்டார கல்வி அலுவலர்களுக்கு பாராட்டு விழா வட்டார கல்வி அலுவலர் வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு வட்டார கல்வி அலுவலர் ஜெயந்தி தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஆனந்தன் முன்னிலை வகித்தார்.அலுவலக உதவியாளர் ரமேஷ் வரவேற்றார்.
நிகழ்ச்சியில், தோப்புத்துறை நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் புயல்குமார் மற்றும் ஆசிரியர்கள் முருகானந்தம், அரசமணி, நீலமேகம், சுப்பிரமணியன், ராமச்சந்திரன், வீரராகவன், ஓய்வு பெற்ற ஆசிரியர் வைத்தியநாதன், வட்டார கல்வி அலுவலக பணியாளர்கள் சகுந்தலா, ஜெயந்தி உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர், வட்டார கல்வி அலுவலக பணியாளர் அமுதா நன்றி கூறினார்.



