Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

சீர்காழி அருகே வைக்கோல் போருக்கு தீ வைத்த மர்ம நபர்

சீர்காழி, செப். 5: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கடவாசல் கிராமத்தில், நேற்றுமுன்தினம் அந்தப் பகுதியில் அறுவடை செய்யப்பட்ட வைக்கோல்களை தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக ஒரு சரக்கு வாகனத்தில் ஏற்றி வந்துள்ளனர். பின்னர் கடவாசல் சாலையில் நிறுத்திவிட்டு அருகில் உள்ள தேநீர் கடையில் டீ குடிக்க சென்றுள்ளனர். அப்போது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் சரக்கு வாகனத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வைக்கோலுக்கு தீ வைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து தீ மளமளவென பரவி எரியத் தொடங்கியது. இது குறித்த அப்பகுதி பொதுமக்கள் சீர்காழி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் ரத்தினவேல் தலைமையில் வீரர்கள் அங்கு சென்று நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் அந்த பகுதியில் சுமார் இரண்டு மணி நேரம் பரபரப்பு நிலவியது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.