Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒழுங்கைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயிலில் தீர்த்தவாரி

தரங்கம்பாடி, ஆக.5: மயிலாடுதுறை மாவட்டம் பொறையார் அருகில் உள்ள ஒழுகைமங்கலம் சீதளா மாரியம்மன் கோயில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. அம்மனுக்கு பால், தேன், பன்னீர், சந்தனம், திரவியப் பொடிகளால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.

அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது. பின்னர் மகிமலை ஆற்றில் அஸ்திரதேவிக்கு பால், தேன், பன்னீர், சந்தன மற்றும் பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர், தொடர்ந்து அம்மன் வீதியுலா காட்சி நடைபெற்றது.