நாகப்பட்டினம், ஆக.5: சுதந்திர தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி ஒத்திகை நேற்று நடந்தது. வரும் 15ம் தேதி சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் சுதந்திர தின விழாவில் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதை தொடர்ந்து நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் மற்றும் சுயநிதி பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்கும் கலை நிகழ்ச்சி நடைபெறும். இதனை சுதந்திர நிகழ்ச்சியில் பங்கேற்கும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கண்டுகளிப்பார்கள். இந்த கலை நிகழ்ச்சிக்கான ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நாகப்பட்டினம் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடந்தது. இந்த ஒத்திகை பயிற்சியில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.


