கீழ்வேளூர்,நவ.4: நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வடக்கு, ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உயர்ந்து வரும் அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி விலை உயர்வை கட்டுப்படுத்த கோரி கண்டன ஆர்ப்பாட்டம் கீழ்வேளூர் பேருந்து நிறுத்தத்தில் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் பாண்டியன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டம் நோக்கம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்ட செயலாளர் மாரிமுத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் துரைராஜ், சுபா தேவி கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகராஜன், சுந்தரமூர்த்தி, குமார், இளையராஜா, வளர்மதி, ஜோதிபாசு, ராஜேந்திரன், ராஜா, குமரன், பிரகாஷ்ராஜ், பிரகாஷ், மகேஸ்வரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


