கொள்ளிடம், நவ.4: கொள்ளிடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பஸ் நிலையம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அத்தியாவசிய பொருட்களின் விவைவாசி உயர்வைக்கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் நேதாஜி, சுந்தரலிங்கம், ஒன்றிய குழு உறுப்பினர்கள் பாரதிராஜா, நடராஜன், ஜெயமாலா மற்றும் நிர்வாகிகள் ராஜேந்திரன், பிச்சைநாதன், குஞ்சிதபாதம், பாக்கியராஜ் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்.


