கொள்ளிடம்,நவ.4: கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் உள்ள சரஸ்வதி கோயிலுக்கு செல்ல புறவழிச் சாலையில் பெயர் பலகை திறக்கப்பட்டது. மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற பழமையான வித்யாரன்யேஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு சரஸ்வதிக்கு தனி சந்நிதி அமைந்துள்ளது. இங்கு சரஸ்வதி தேவி பிறந்ததாக புராணம் கூறுகிறது.
சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச் சாலையிலிருந்து கோயிலுக்கு 2 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. கோயிலுக்கு புறவழிச்சாலையில் இருந்து எளிதில் செல்லும் வகையில் சரஸ்வதி விலாசம் கிராம மக்கள் சார்பில் புதியதாக சாலை ஓரம் பெயர் பலகை வைக்கப்பட்டு திறக்கப்பட்டது. இந்தநிகழ்ச்சியில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரிவள்ளல், சரஸ்வதி விளாகம் கிராமத்தலைவர் ராமலிங்கம், ராஜாராமன்,கலியமூர்த்தி,சுபாஷ் நடராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


