நாகப்பட்டினம், மே 4: நாகப்ப ட்டினம் நகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் 18 இடங்களில் 39 சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை எஸ்பி சுஜித்குமார் நாகப்பட் டினம் எஸ்பி அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது: நாகப்பட்டினம் நகரில் குற்றங்களை தடுக்கும் வகையில் இந்திய வர்த்தக தொழிற் குழுமம் சார்பில் நகரில் 18 இடங்களில் 39 சிசிடிவி கேமராக்கள் ரூ.10 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா நிறுவப்பட்டுள்ளது.
இதில் வாஞ்சூர் ரவுண்டானா, புத்தூர் ரவுண்டானா, புதிய பஸ் ஸ்டாண்ட் ஆகிய 3 இடங்களில் அதிக தொழில்நுட்பம் கொண்ட கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமிராக்கள் மூலம் நாகப்பட்டினம் நகரில் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபடுவர்களை எளிதில் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடியும். இதன் மூலம் குற்ற சம்பவங்கள் மற்றும் போக்குவரத்து விதி மீறல்கள் குறையும் என்றார். இந்திய வர்த்தக தொழிற் குழும தலைவர் மனோகரன், திட்ட தலைவர் சுபா ஷ்சந்திரன், ஏடிஎஸ் பிவேணு கோபால், டி எஸ் பி ராமச்சந்திரமூர்த்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.



