நாகப்பட்டினம், ஜூன் 3: நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: பன்முகத் திறமை கொண்டவர்களுக்கு 2027ம் ஆண்டு ஜனவரி 26ம் தேதி குடியரசு தின விழாவில் பத்ம விருது வழங்கப்படும். கலை, இலக்கியம், கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூகப்பணி, அறிவியல், பொறியியல், பொது விவகாரங்கள், குடிமைப்பணிகள், வர்த்தகம் மற்றும் தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிக சிறந்த மற்றும் அளப்பரிய சாதனைகள் அல்லது சேவைகள் புரிந்தவர்களுக்கு இந்தியாவின் மிக உயரிய விருதுகளான பத்ம விபூஷண், பத்ம பூஷண் மற்றும் பத்மஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தன்று ஒன்றிய அரசு சார்பில் இவ்விருதுகள் வழங்கப்படும். அதன்படி நடப்பு ஆண்டுக்கான பத்ம விருதுகள் பெற நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்தோர் ஜூலை மாதம் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பிரவீன்குமார் தெரிவித்துள்ளார்.
