Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

நாகப்பட்டினத்தில் விற்பனைக்காக கடத்தி வரப்பட்ட 25 கிலோ குட்கா

நாகப் பட்டினம், ஆக. 1: நாகப்பட்டினத்தில் கடத்தப்பட்ட 25 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். நாகையில் புகையிலை பொருட்கள் கடத்தல் நடப்பதாக நகர போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது.  அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நாகை புத்தூர் அண்ணா சிலை அருகே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.

அப்போது அவர் புகையிலை பொருட்களை கடத்தி வருவது தெரியவந்தது. விசாரணையில் நாகை செல்லூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன்(34) என்பதும், இவர் நாகை நகரப் பகுதியில் விற்பனை செய்வதற்காக புகையிலை பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்த 23 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.