Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காணாமல்போன, திருடப்பட்ட 75 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைப்பு

நாகப்பட்டினம்,ஜூன்25: நாகப்பட்டினம் மாவட்டத்தில் பொதுமக்கள் தொலைத்த மற்றும் திருடப்பட்ட 75 செல்போன்கள் உரியவர்களிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருடப்பட்ட மற்றும் தொலைந்து போனதாக செல்போன் உரிமையாளர்கள் காவல்துறையில் புகார் கொடுத்தனர். இதன் பேரில் இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவு மேற்கொண்ட தொடர் நடவடிக்கையின் மூலம் 75 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்கள் நாகப்பட்டினம் எஸ்பி அலுவலகத்திற்கு உரியவர்களை வரவழைத்து எஸ்பி கேழ்கர் சுப்ரமணி பாலசந்திரா ஒப்படைத்தார். முன்னதாக செல்போன் உரிமையாளர்களின் உரிய ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டது. அப்போது எஸ்பி கூறும்போது, பொதுமக்கள் தங்களது செல்போன் தொலைந்தாலோ அல்லது திருடப்பட்டாலோ உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் அல்லது இணைய வழி குற்றத் தடுப்பு பிரிவில் புகார் அளிக்க வேண்டும். உரிய நேரத்தில் புகார் அளிப்பதன் மூலம் செல்போன்கள் விரைவாக கண்டறிந்து மீட்டெடுக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.