Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

சட்டநாதபுரம் - நாகப்பட்டினம் இடையே ரூ.19 கோடி செலவில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி

நாகப்பட்டினம், ஜூலை 9:இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடந்து வரும் சட்டநாதபுரம்- நாகப்பட்டினம் நான்கு வழி சாலை பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் சட்டநாதபுரம் முதல் நாகப்பட்டினம் வரை 50 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழி சாலை போடப்படுகிறது. ரூ.19 கோடி மதிப்பில் நடந்து வரும் பணிகளை கலெக்டர் பிரவீன்குமார் ஆய்வு செய்தார்.

அப்போது நாகப்பட்டினம் புத்தூர் ரவுண்டானா புதுப்பித்தல் பணிகள், நாகப்பட்டினம் அருகே பனங்குடியில் 300 மீட்டர் நீளத்திற்கு வெட்டாறு பாலம் கட்டுமான பணிகள் ஆகியவற்றின் பணிகள் தரத்தை ஆய்வு செய்து, பணிகளை விரைவாக மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தேசிய நெடுஞ்சாலை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரவீன்குமார் அறிவுறுத்தினார்.