Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

சீர்காழியில் காட்சி பொருளான மணிகூண்டு சீரமைக்க பொது மக்கள் எதிர்பார்ப்பு

சீர்காழி, ஜூலை 31: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கடைவீதியில் 1958ம் ஆண்டு சீர்காழி நகராட்சி ஊராட்சியாக இருந்தபோது மணிக்கூண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டில் அமைக்கப்பட்டுள்ள கடிகாரத்தின் மூலம் வியாபாரிகள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் நேரத்தை அறிந்து வந்துள்ளனர்.ஆனால் காலப்போக்கில் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக கடிகாரங்கள் செயல்பாட்டுக்கு வந்ததால் நேரத்தை அறிந்து கொள்வது கைக்குள் வந்தது. தற்போது செல்போன், கைக்கடிகாரங்கள் போன்ற பொருட்களிலும் நேரத்தை அறிந்து கொள்ள முடிகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள் மணிக்கூண்டின் தேவை இல்லாமல் போனது கடந்த சில ஆண்டுகளாக மணிக்கூண்டு பராமரிக்கப்படாமல், செயல்படாமல் காட்சி பொருளாக இருந்து வருகிறது.

கடைவீதியில் இருக்கும் மணிக்கூண்டு, சீர்காழி நகரின் ஒரு அடையாளமாக திகழ்ந்து வருகிறது. சீர்காழி நகரில் வெளியூரில் இருந்து வருபவர்கள் மணிக்கூண்டை அடையாளம் சொல்லியே வந்து மற்றவர்களை அழைத்து செல்லும் சம்பவமும் தினந்தோறும் நடந்து வருகிறது. நம் முன்னோர்கள் நமக்காக அமைத்து கொடுத்த மணி கூண்டை வரும் தலைமுறையினர் பார்த்து அறிந்து கொள்ளும் வகையில் பாதுகாப்பது நம் அனைவரின் கடமையாகும். பழமை வாய்ந்த மணிக்கூண்டை புதுப்பித்து கடிகாரம் செயல்பட வைக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகவும் ஆர்வமாகவும் இருந்து வருகிறது.