நாகப்பட்டினம்,செப்.30: காந்தி ஜெயந்தி தினத்தை முன்னிட்டு வரும் 2ம் தேதி நாகப்பட்டிமை மாவட்டத்தில் அனைத்து மதுபானக் கடைகளையும் மூடிட வேண்டும் என கலெக்டர் பிரவீன்குமார் உத்தரவிட்டுள்ளார்.இது குறித்து அவர் ஒரு செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: நாகப்பட்டினம் மாவட்டத்தில் காந்தியடிகள் பிறந்த நாள் விழாவான \”காந்தி ஜெயந்தி\” தினத்தை முன்னிட்டு வரும் 2ம் தேதி ஒருநாள் மட்டும் தமிழ்நாடு வாணிபக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து மதுபானக் கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினம் யாரும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபான விதிமுறைகளின்படி சம்பந்தப்பட்டவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
+
Advertisement

