Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

வேதாரண்யம் தாலுகா செம்போடை அரசுபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம விழா

வேதாரண்யம், செப். 30: வேதாரண்யம் தாலுகாசெம்போடை அரசு பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சங்கம விழா நடைபெற்றது. வேதாரண்யம் தாலுகாசெம்போடை அரசு மேல்நிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்கம விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் தலைமை வகித்தார். முன்னதாக கவிஞர் மணிவண்ணன் வரவேற்றார். 1967ம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்ட காலம் முதல் கடந்த கல்வியாண்டு வரை பயின்ற முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த முன்னாள் மாணவர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டு பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர். தங்களுடைய பேரன் பேத்தி கொள்ளும் பேத்தி எள்ளு பேத்தி உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் தங்கள் குடும்பத்தோடு கலந்து கொண்டனர். ஒருவரருவருக்கொருவர் பள்ளி நாட்களில் நடைபெற்ற பசுமை நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.