நாகப்பட்டினம்,செப்.30: குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் பிரவீன்குமார் தலைமை வகித்தார்.அப்போது அவர் பேசியதாவது: அனைத்து கிராமங்களிலும் கிராம அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் 14 பேர் கொண்ட உறுப்பினர்கள் உள்ளனர். இக்குழு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூட்டம் நடத்தி குழந்தைகள் பாதுகாப்பு குறித்த தீர்மானங்கள் இயற்றி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து உறுப்பினர்களும் கட்டாயம் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
+
Advertisement

