Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மழைக்கால முன் எச்சரிக்கையாக தயார் நிலையில் மீட்பு குழுவினர்

நாகப்பட்டினம்,அக்.28: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழைக்கால முன்எச்சரிக்கையாக SDRF மீட்புக் குழுவினரின் தயார் நிலையில் உள்ளனர் என எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா கூறினார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, மழை வெள்ளம் மற்றும் இயற்கைப் பேரிடர்களால் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கவும், அவசர காலங்களில் விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் மாவட்டக் காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, நாகப்பட்டினம் மாவட்டத்தில் தயார் நிலையில் உள்ள மாநிலப் பேரிடர் மீட்புப் படை (SDRF - State Disaster Response Force) குழுவினரின் செயல்பாடுகள் மற்றும் மீட்புப் பணிகளுக்காக வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை எஸ்பி கேழ்கர் சுப்ரமணிய பாலசந்திரா ஆய்வு செய்தார். ஆய்வின்போது, மழை வெள்ளம் மற்றும் பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பாக மீட்பதற்குப் பயன்படுத்தப்படும் மீட்பு உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் அவசரகால மீட்புப் பணிகளுக்குத் தேவையான பொருட்களின் இருப்பு மற்றும் பயன்பாட்டுத் தயார் நிலை ஆகியவை குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் கூறியதாவது:கனமழை காரணமாகத் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் தேங்குதல், குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் புகுதல், சாலைகளில் போக்குவரத்துப் பாதிப்பு மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுதல் போன்ற சூழ்நிலைகள் ஏற்பட்டால், உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். பேரிடர் காலங்களில் பொதுமக்களைப் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல், ஆபத்தான பகுதிகளில் சிக்கியவர்களை மீட்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அரசுத் துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தப்பட்டது.

மழைக்காலங்களில் பொதுமக்களின் உயிர் மற்றும் உடைமைகளைப் பாதுகாப்பதற்கு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மிகவும் அவசியமானது. மீட்புக் குழுவினர் தங்களுக்குத் தேவையான உபகரணங்களை எப்போதும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அவசர அழைப்புகள் கிடைக்கும்போது விரைந்து செயல்பட வேண்டும்.நாகப்பட்டினம் மாவட்டத்தில் மழை மற்றும் இயற்கைப் பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் மாவட்டக் காவல்துறை தொடர்ந்து முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் பாதுகாப்பிற்கு காவல் துறை முன்னுரிமை தொடர்ந்து வழங்கி வருகிறது என்றார்.