Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சந்திரபாடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பை தடுக்க கருங்கல் தடுப்புசுவர் அமைக்க கோரிக்கை

தரங்கம்பாடி, ஜூலை 28: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் சந்திர பாடி மீனவர் கிராமத்தில் கடல் அரிப்பு தடுக்க வகையில் கருங்கல் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சந்திரப்பாடி ஊராட்சியில் சின்னூர்பேட்டை உள்ளடக்கி 3 வார்டுகளில் சுமார் 3500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் வசித்து வருகின்றனர். இந்த சந்திரப்பாடி மீனவர் கிராமத்தில் சுமார் 300 பைபர் படகுகள், 20 விசை படகுகள் மூலம் மீன் பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சந்திர பாடி மீனவர் கிராமத்தில் கடற்கரை ஆற்றின் கடந்த ஆண்டு மீன்பிடி இறங்குதளம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மீன்பிடி இறங்கு தளத்திற்கு கடலில் அமைக்கப்பட்டுள்ள கருங்கல் தடுப்புச் சுவற்றால் கடல் அலையின் சீற்றம் திசைமாறி மண் அரிப்பு ஏற்பட்டு வருவதால் கடற்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்படும் பைபர் படகுகள் மற்றும் மீன்பிடி சாதனங்கள் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடற்கரை பகுதியில் மண் அரிப்பு ஏற்படுவதால் தாழ்வான பகுதியான சந்திரபாடி மீனவ கிராமத்தில் மழை மற்றும் வெள்ள காலங்களில் கடல் நீர் உள்புகுவதால் மிகுந்த சிரமத்தில் வாழ்ந்து வருகின்றனர்.

இதனை தடுக்க வகையில் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து சுமார் 800 மீட்டர் தூரம் கடற்கரைப் பகுதியில் கருங்கல் சுவர் அமைத்து சந்திரப்பாடி மீனவர் கிராமத்தை பாதுக்காக்க வேண்டும் என்று மீனவ பஞ்சாயத்தார்கள் மற்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.