Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மேட்டூர் திறக்கப்பட்ட தண்ணீர் 11 ஏக்கருக்கு கூட வரவில்லை

நாகப்பட்டினம், செப். 26: 11 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கியுள்ள நிலையில் 11 ஏக்கருக்கு கூட தண்ணீர் இன்னும் வராத வகையில், அரசு பெயர் அளவிற்கு மேட்டூரில் தண்ணீர் திறந்து விட்டுள்ளது. இதை நம்பி விவசாயிகள் நேரடி விதை தெளிப்பு செய்துள்ளனர் என்று நாகையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது.

நாகை மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: மணியன்: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த கன மழையால் சவுக்கு, தென்னை, பூச்செடிகள் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த மழை நீர் வீணாக கடலில் சென்று சேர்ந்தது. எனவே இனி வரும் காலங்களில் மழை நீர் வீணாக செல்வதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.