Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

இரவு நேர மின்வெட்டு

நாகப்பட்டினம், செப். 26: நாகப்பட்டினத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் ஒரத்தூர் உள்ளது. இங்கு நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இயங்கி வருகிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்வேறு நோய் மற்றும் விபத்துக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். காலை நேரங்களில் வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவும் இயங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு நான்காவது மாடியில் உள்ள உள்நோயாளிகள் பிரிவு வார்டில் திடீரென மின்விநியோகம் தடைப்பட்டது. 1 மணி நேரத்திற்கும் மேலாக மின்சாரம் வராததால் அப்பகுதி முழுவதும் இருளில் மூழ்கியது. போதிய வெளிச்சம் இல்லாத காரணத்தால் நோயாளிகளுக்குத் தேவையான அவசர சிகிச்சைகள் மற்றும் மருந்துகளை வழங்குவதில் செவிலியர்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். மின்விசிறிகள் இயங்காததால் நோயாளிகளுக்கு உதவியாக வந்திருந்த உறவினர்களும் அவதி அடைந்தனர். 1 மணி நேரம் மின்வெட்டு ஏற்பட்டும் ஜெனரேட்டர் இயக்கப்படாமல் இருந்தது.