Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
MSME
search-icon-img
Advertisement

மயிலாடுதுறையில் நடந்த உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியில் மாணவர்களுக்கு வழிகாட்டல் கையேடு

மயிலாடுதுறை, செப். 26: மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் நடைபெற்ற \”உயர்வுக்கு படி\” உயர்க்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் காந்த் முகாமை தொடங்கி வைத்து, உயர் கல்வி வழிகாட்டல் கையேடுகள் வழங்கி பேசினார்.பின்னர், மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது: உயர்கல்வி என்பது ஒரு பட்டத்தைப் பெறுவதற்காக மட்டும் அல்ல. அது நமது அறிவை விரிவுபடுத்துவதற்கும். திறன்களை வளர்த்துக் கொள்வதற்கும், தன்னம்பிக்கையை அதிகரிப்பதற்கும், எதிர்கால வேலைவாய்ப்புகளுக்கு நம்மை தயார்படுத்துவதற்குமான ஒரு வாய்ப்பாகும்.

இன்றைய உலகில் கல்வியுடன் சேர்த்து தகவல் தொழில்நுட்பம். தொடர்புத்திறன், ஆங்கில மொழித்திறன், குழுவாக செயல்படும் திறன், பிரச்சினைகளை தீர்க்கும் திறன் போன்ற பல்வேறு திறன்களும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. எனவே, மாணவர்கள் தங்கள் பட்டப்படிப்புடன் தொழில்துறை சார்ந்த திறன்களையும் தொடர்ந்து வளர்த்துக் கொள்ள வேண்டும்.