Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அரசு கலை, அறிவியல் கல்லூரியில் போதைகளுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம்

நாகப்பட்டினம், ஜூன் 26: நாகப்பட்டினம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருளுக்கு எதிராக நடந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக மனநல ஆலோசகர் தியாகராஜன் பேசினார். இதை தொடர்ந்து மாணவர்களுக்குக் கவிதை மற்றும் பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

கல்லூரி ஓய்ஆர்சி/ ஆர்ஆர்சி பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் ரகுநாத், ரேணுகா ஆகியோர் மாணவர்களுக்கு கவிதை போட்டிகளை நடத்தினர். கல்லூரி மகளிர் குழுமம் ஒருங்கிணைப்பாளர் கௌசல்யா மாணவர்களுக்குப் பேச்சு போட்டியினை நடத்தினார். முதல்வர் அஜிதா தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். கல்லூரி போதைப்பொருள் எதிர்ப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் மதியரசன் நெறிப்படுத்தினார்.