Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

மாநில அளவிலான போட்டிகளில் நாகப்பட்டினம் ஊர்காவல் படையினர் சாம்பியன் பட்டம் வென்று அசத்தல்

நாகப்பட்டினம், செப். 25: தேனியில் நடந்த மாநில அளவிலான போட்டிகளில் நாகப்பட்டினம் ஊர்க்காவல் படையினர் சாம்பியன் பட்டம் பெற்றனர். தேனி மாவட்டத்தில் மாநில அளவிலான அரண் 2026ம் ஆண்டிற்கான போட்டிகள் கடந்த 18ம்தேதி தொடங்கி 20ம்தேதி வரை நடந்தது. இதில் ஊர்க்காவல் படையின் தொழில்திறன் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது. இந்த போட்டிகளில் தஞ்சாவூர் சரகம் சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையினர் கலந்து கொண்டு பல்வேறு போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

கடுமையான போட்டிகளுக்கு இடையில் சிறப்பாக செயல்பட்ட நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையினர் தஞ்சாவூர் சரகத்தின் சாம்பியன் பட்டத்தைப் பெற்றனர். மேலும் நாகப்பட்டினம் மாவட்ட ஊர்க்காவல் படையினரின் ஆண்கள் அணி கபடி போட்டி மற்றும் உடற்பயிற்சி போட்டிகளில் ரன்னர் - அப் இடத்தைப் பெற்று சிறப்பித்தனர். அதேபோல் பெண்கள் அணி வாலிபால் மற்றும் கபடி போட்டிகளில் ரன்னர்-அப் இடத்தைப் பெற்று தங்களது சிறப்பான விளையாட்டுத் திறனை வெளிப்படுத்தினர்.