வேதாரண்யம், செப். 25: வேதாரண்யம் அரசு கலை அறிவியல் கல்லுாரியில் நாட்டு நல பணி திட்டத்தின் சார்பில் மாணவிகளுக்கான சட்ட அறிவு விழிப்புணர்வு முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கு கல்லுாரி முதல்வர் சாந்தி தலைமை வகித்தார். துணை முதல்வர் கண்ணன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் நாகை மாவட்ட சட்டப்பணிகள் குழு செயலர் நீதிபதி சுப்புலட்சுமி சட்ட விழிப்புணர்வு கல்வி குறித்து பேசியதாவது: பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் அனைவரும் நடைமுறை சட்டம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய உரிமை உள்ளது. படிக்கும் காலங்களில் எந்தவித சிறு தவறுகளையும் செய்யக் கூடாது. அப்படிப்பட்ட தவறுகள் பின்பு அவர்களுடைய பிற்கால நல்ல உயர்வான வாழ்க்கைக்கு துன்பத்தை கொடுக்கும்.
+
Advertisement


