Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கொள்ளிடம் சோதனைச் சாவடி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பை

கொள்ளிடம், மே 25: கொள்ளிடம் சோதனை சாவடி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி வருகிறது. மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கொள்ளிடம் சோதனைச் சாவடியை ஒட்டி சுமார் 50 மீட்டர் தொலைவில் தினந்தோறும் காலை மாலை ஆகிய இரு வேளைகளிலும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகள், இறந்த கோழிக்கழிவுகள், இறந்த விலங்கினங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கொட்டப்பட்டு வருகிறது. மக்காத பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் பொருட்கள் அனைத்தும் குப்பையுடன் சேர்ந்து கொட்டப்பட்டு வருகிறது.

காற்று வேகமாக வீசினால் மக்காத பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் பறந்து வந்து சாலை மற்றும் அங்குள்ள குடியிருப்பு பகுதிகளில் விழுகிறது. இதனால் சுற்றுப்புற சுகாதாரம் பாதிக்கும் நிலை இருந்து வருகிறது. சோதனைச்சாவடியை ஒட்டியே குப்பைகளுடன் இறந்த விலங்கினங்கள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் துர்நாற்றம் வீசி வருகிறது. தொடர்ந்து வீசிவரும் இந்த துர்நாற்றத்தினால் இரவு பகல் என 24 மணி நேரமும் சோதனை சாவடியில் வேலை பார்த்து வரும் போலீசார் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர்.