Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

அதிகரிக்கும் குடிநீர் தட்டுப்பாடு திருநள்ளாறில் 27ம்தேதி தன்வந்த்ரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா

காரைக்கால், ஜூலை 23: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில், தருமபுரம் ஆதீனம் சார்பில் உலகத் தரத்தில் உருவாக்கப்பட உள்ள தன்வந்த்ரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா மற்றும் பல்வேறு சமூக நலன், கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சித் திட்டங்களின் தொடக்க விழா வரும் 27-ஆம் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது. திருநள்ளாறில் உள்ள தருமபுரம் ஆதீன கட்டளை மடம் பின்புற வளாகத்தில் நடைபெறும் இந்த விழாவில், தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் ல மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் அருளாட்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, தருமபுரம் ஆதீனம் உருவாக்கும் தன்வந்த்ரா ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மூலிகைப் பண்ணைத் திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறுகிறது. பாரம்பரிய மருத்துவ முறைகள், ஆயுர்வேதம், சித்தம்,  யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உலகத் தரத்தில் இந்த ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா உருவாக்கப்பட உள்ளது.