Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Catterpillar
search-icon-img
Advertisement

கொள்ளிடம் புறவழிச்சாலையில் ஆற்று பாலத்தில் 26ஆம் தேதி போக்குவரத்து துவக்கம் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தகவல்

கொள்ளிடம்,செப்.23: கொள்ளிடம் புறவழிச் சாலையில் ஆற்று பாலத்தில் மீண்டும் வரும் 26ஆம் தேதி முதல் போக்குவரத்து துவங்குவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் புறவழிச்சாலையில் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டிருந்த புதிய பாலத்தில் ஏற்பட்டிருந்த பழுது காரணமாக கடந்த இரண்டு மாத காலமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டு பாலம் சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சீர்காழியிலிருந்து சிதம்பரம் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பழைய தேசிய நெடுஞ்சாலைக்கு மாற்றப்பட்டு அரசூர், எருக்கூர், புத்தூர், தைக்கால், கொள்ளிடம் மற்றும் வல்லம்படுகை வழியாக இயக்கப்பட்டு வருகிறது.

இதனால் பழைய தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகனங்கள் தினந்தோறும் ஊர்ந்து செல்லக்கூடிய நிலையில் இருந்து வருகின்றன. இதனால் வாகன ஓட்டிகள் முதல் கால்நடையாக நடந்து செல்பவர்கள் வரை அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மாத காலமாக இரவும் பகலும் கொள்ளிடம் ஆற்று பாலம் சரி செய்யும் பணி நடைபெற்றது. இந்நிலையில், பாலம் சரி செய்யும் பணி முடிவடைந்துள்ள நிலையில், மீண்டும் போக்குவரத்து வரும் 26ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.