Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement Tafe

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் இந்திய-அமெரிக்க தடையற்ற ஒப்பந்த நகல் எரிக்கும் போராட்டம்

நாகப்பட்டினம்,ஜூலை 23: இந்திய -அமெரிக்க தடையற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஒப்பந்த நகலை எரிக்கும் போராட்டம் நாகப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை செல்லூரில் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் சரபோஜி தலைமை வகித்தார். நாகப்பட்டினம் ஒன்றிய துணை செயலாளர் சுந்தரம், மாவட்ட குழு உறுப்பினர் செல்லதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்தியா அமெரிக்கா நாடுகள் இடையே முழுமையான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் இதுவரை கையெழுத்து ஆகவில்லை.

அதற்குப் பதிலாக, இரு நாடுகளும் இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் கட்டத்தில் உள்ளது. ஆனால் 99 சதவித ஒப்பந்த பணிகள் முடிவடைந்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. மீதமுள்ள 1 சதவித பொருட்கள் மீதான விவகாரங்களுக்குத் தீர்வு காணப்பட்டு, ஒரு விரிவான ஒப்பந்தத்திற்கு வழிவகை செய்யும் இடைக்கால ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த ஒப்பந்தம் நிறைவு பெற்றால் அமெரிக்காவின் தொழில்நுட்ப பொருட்கள், மருத்துவ சாதனங்கள் மற்றும் விவசாய பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளை விரிவுபடுத்துதல், டிஜிட்டல் வர்த்தக தடைகள் அகற்றுதல் செயல்படுத்தப்படும். இதனால் இந்தியாவின் விவசாயம் கேள்விக்குறியாக மாறிவிடும். எனவே இந்திய -அமெரிக்க தடையற்ற ஒப்பந்தத்தை ரத்து செய்ய கோரி கோஷங்கள் எழுப்பினர். அதை தொடர்ந்து அதன் நகலை எரித்து போராட்டம் ஈடுபட்டனர்.

விவசாய சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் நீதிராஜன், இளைஞர் மன்ற ஒன்றிய செயலாளர் புதியவன், இளைஞர் மன்ற ஒன்றிய தலைவர் சத்யராஜ், நிர்வாக குழு உறுப்பினர் நற்குணன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் கல்யாணசுந்தரம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.