Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நாகையில் 18 இடங்களில் நடந்தது: நாகப்பட்டினத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 450 மனுக்கள் பெறப்பட்டது

நாகப்பட்டினம், ஜூலை 21: நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. வங்கிக் கடன், உதவித்தொகை, குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மொத்தம் 450 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனம் வழங்கிய 10 மறு சுழற்சி பாதுகாவலர்களுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் மறு சுழற்சி தூய்மை வாகனங்களை கலெக்டர் பிரவீன்குமார் வழங்கினார். டிஆர்ஓ பவணந்தி, கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) அரங்கநாதன், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராமலிங்கம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.