மயிலாடுதுறை ஆக, 20: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி மது விலக்கு அமல்பிரிவு காவல் சரகம், தென்னலக்குடி பகுதியில் சட்டவிரோதமாக பாண்டிச்சேரி மதுபானம் இருசக்கர வாகனங்களில் கடத்தி வந்து விற்கப்படுவதாக ரகசிய தகவில் கிடைத்தது.
அதன்படி கடந்த 23.07.2026ம் தேதி மயிலாடுதுறை மதுவிலக்கு அமல்பிரிவு ஆய்வாளர் (பொறுப்பு சீர்காழி மதுவிலக்கு அமல்பிரிவு) ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் வைத்தீஸ்வரன்கோவில் காவல் சரகம், தென்னலக்குடி பாலம் அருகில் மதுவிலக்கு சம்பந்தமாக வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காரைக்கால் மாவட்டம், கோட்டுச்சேரி தாலுகா, திருவேட்டக்குடி. காலனி தெருவைச்சேர்ந்த கலைச்செலவன் என்பவரின் மகன் ரகுராமன் (46) வந்த நான்குசக்கா வாகனத்தில் சட்டவிரோதமாக பாண்டி சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது.
மேலும் சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. ரகுராமன் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார். ரகுமான் தொடர்ந்து மதுவிலக்கு குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதால் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட எஸ் பி சினேஹா ப்ரியா, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அதன் பேரில், மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர், ரகுராமன் குண்டர் தடுப்பு சட்டத்தின்படி சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.



