கோட்டப்பொறியாளரிடம் மனு; வைத்தீஸ்வரன் கோயிலில் காலநிலை மாற்ற பாதிப்புகளை குறைக்க மரக்கன்று நடும் பணி
சீர்காழி, ஆக. 19: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோயில் குருஞானசம்பந்தர் மிஷன் முத்தையா மேல்நிலைப் பள்ளி மற்றும் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி இணைந்து தருமை ஆதீனம் 26வது குருமகா சந்நிதானம் நூற்றாண்டை முன்னிட்டு காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில் 100 மரக்கன்றுகள் நடும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.பள்ளியின் நிர்வாகக்குழு தலைவர் ராஜேஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில் தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு விழாவை துவக்கி வைத்தார்.
விழாவில் வைத்தீஸ்வரன் கோயில் பேரூராட்சி தலைவர் பூங்கொடி அலெக்சாண்டர், திமுக மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் அன்புச்செழியன், பேரூராட்சி செயல் அலுவலர், ராஜா இளநிலை உதவியாளர் மாரியப்பன் பேரூராட்சி மன்ற உறுப்பினர் ஆனந்த், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினர் சரவணன், மயிலாடுதுறை மாவட்ட பசுமை படை ஒருங்கிணைப்பாளர் காமராஜ், மாருதி பில்டர்ஸ் பொறியாளர் அகோரம், மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளியின் முதல்வர் சரவணன், திமுக மாவட்ட பிரதிநிதி கமலநாதன் திமுக அவைத் தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பள்ளி செயலர் பாஸ்கரன் வழிகாட்டுதலில் முதல்வர் ஜெகதீஷ்குமார், பொறுப்பாசிரியர்கள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உதவியாளர்கள், வேன் ஓட்டுநர்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.



