Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

நீட் தேர்வில் வெற்றி பெற்று ஆயக்காரன்புலம் 3 அரசு பள்ளி மாணவிகள் மருத்துவ கல்லூரிகளுக்கு தேர்வாகி அசத்தல்

வேதாரண்யம், ஆக. 19: வேதாரண்யம் தாலுகா ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 1100 மாணவிகள் படித்து வருகின்றனர். ஆண்டுதோறும் இப்பள்ளியில் மாவட்ட மாநில அளவில் பல்வேறு சாதனைகளை செய்து வருகிறது. தொடர்ச்சியாக கடந்த மூன்று ஆண்டுகால மருத்துவ கல்லூரியில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள் இடம் பிடித்துள்ளனர். அதேபோல் இந்த ஆண்டு இப்பள்ளியில் 2023-24 கல்வியாண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவிகள் மூவர், நீட் தேர்வில் வெற்றி பெற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

பள்ளி மாணவி சோனாஞ்சலி, சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி நிவேதா, சேலம் அரசு மருத்துவக் கல்லூரியிலும், மாணவி செல்ல மகராசி, அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவம் பயில தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.கிராமப்புற அரசுப் பள்ளியில் பிளஸ் 2 கல்வியை நிறைவு செய்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெற்றுள்ள இம்மூன்று மாணவிகளின் சாதனைக்கு பள்ளித் தலைமையாசிரியர் சாந்தி, ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆசிரியர் கழகத் தலைவர் டாக்டர் சுந்தர்ராஜன், பொருளாளர் செங்குட்டுவன் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவை நனவாக்கும் 7.5 சதவீத இடஒதுக்கீட்டின் பயனைப் பெற்று, ஒரே பள்ளியைச் சேர்ந்த 3 மாணவிகள் மருத்துவக் கல்லூரிகளில் இடம்பிடித்து ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.