Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Hyundai Venue
search-icon-img
Advertisement

நாகை கலெக்டர் அழைப்பு; கொள்ளிடத்தில் கார் மோதி அரசு பாலிடெக்னிக் உதவியாளர் பலி

கொள்ளிடம், ஜூன் 19: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே சீர்காழி பாலசுப்ரமணியன் நகரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் சரவணன் (42). இவர் தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் உள்ள அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் தொழில்நுட்ப உதவியாளராக வேலை பார்த்து வந்தார்.இவர் நேற்று மாலை சிதம்பரத்திலிருந்து சீர்காழி நோக்கி புறவழிச் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். ஆனந்த கூத்தன் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, எதிரே வந்த அடையாளம் தெரியாத கார் ஒன்று மோதிவிட்டு வேகமாக சென்று விட்டது. இதில் படுகாயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.இது குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் ஆணைக்காரன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று. இறந்த சரவணன் உடலை கைப்பற்றி சீர்காழி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்தி தப்பி ஓடிய வாகனத்தை தேடி வருகின்றனர்.