நாகப்பட்டினம், ஆக.18: நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற பொதுமக்கள் குறைதீர்க்கும்நாள் கூட்டத்தில் 802 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் அளிக்கப்பட்டது.
நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மாவட்ட கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பொதுமக்கள் வருகை தந்து கோரிக்கை மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.




