உரிய பாதுகாப்பு, வழிகாட்டு நெறிமுறைகளுடன் வேளாங்கண்ணி கடலில் பக்தர்கள் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும்
நாகப்பட்டினம், ஆக.18: வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆண்டு திருவிழாவுக்கு வரும் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுடன் கடலில் குளிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன்குமார் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.



