Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

போதிய மும்முனை மின்சாரம் இல்லை; குறுவை பயிரை காப்பாற்ற விவசாயிகள் கடும் போராட்டம்

தரங்கம்பாடி, ஜூன் 18: மயிலாடுதுறை மாவட்டம். செம்பனார்கோவில் வட்டாரத்தில் மேட்டூர் அணை திறக்காததாலும், போதிய மின்சாரம் கிடைக்காததாலும் சாகுபடி செய்யபட்ட குறுவை பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் அல்லல்படுகின்றனர்.

செம்பனார்கோவில் வட்டாரத்தில் திருக்களாச்சேரி, எடுத்துகட்டி, சங்கரன்பந்தல், நல்லாடை, திருவிடைகழி, திருவிளையாட்டம். ஈச்சங்குடி, மேமாத்தூர், கீழ்மாத்தூர், கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், மேலையூர், கீழையூர் உள்ளிட்ட கிராமங்களில் மின்மோட்டார் மூலம் தண்ணீர் பெற்று விவசாயிகள் குறுவை சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மின் தட்டுபாடு ஏற்பட்டு குறைந்த அளவு நேரமே மும்முனை மின்சாரம் வழங்கபடுகிறது. மேலும் வழக்கமாக ஜூன் 12ல் மேட்டூர் அணை திறக்கபட்டு ஆறுகளில் தண்ணீர் வரும். அதன் மூலம் வாய்க்கால்களில் தண்ணீர் வந்து விவசாயத்திற்கு பயன்பட்டு வந்தது. தற்போது மேட்டூர் அணை திறக்கபடாததால் ஆத்துபாசன தண்ணீர் இல்லை.